நிர்வாணப் படங்களை பரப்புவதாக மிரட்டடி ரூ.65 லட்சம் பறிப்பு... நடிகர் ஷியாஸ் மீது இளம்பெண் புகார்!

 
ஷியாஸ் ஷியாஸ்

மலையாளத் திரையுலகின் பிரபல நடிகரும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஷியாஸ் கரீம் மீது அவரது தொழில் கூட்டாளியான பெண் ஒருவர் பரபரப்பான மோசடி மற்றும் பாலியல் சுரண்டல் புகாரைப் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டில் தொழில் செய்து வந்த அந்தப் பெண், கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராம் வழியாக ஷியாஸ் உடன் அறிமுகமாகியுள்ளார்.

இந்த அறிமுகம் நட்பாக மாறி, பின்னர் இருவரும் இணைந்து தொழில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்தப் பெண் சுமார் 65 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலோ அல்லது மற்ற காரணங்களாலோ தான் முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, நடிகர் ஷியாஸ் கரீம் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செல்போன் சிசிடிவி ஆபாச வீடியோ புகைப்படம்

குறிப்பாக, அந்தப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைத் தனது கைவசம் வைத்துள்ளதாகவும், பணத்தைக் கேட்டுத் தொந்தரவு செய்தால் அவற்றை இணையதளங்களில் கசிய விட்டு விடுவேன் என்றும் ஷியாஸ் மிரட்டியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, தன்னை அவர் பாலியல் ரீதியாகவும் சுரண்டினார் என்ற கடுமையான குற்றச்சாட்டையும் அந்தப் பெண் முன்வைத்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நேற்று நடிகர் ஷியாஸ் கரீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்களின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சமூக வலைதள உரையாடல்கள் குறித்த ஆதாரங்களை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.

லேடீஸ் ஹாஸ்டல் ரகசிய கேமிரா செல்போன் குளியலறை வீடியோ பாத்ரூம்

ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கிய ஷியாஸ் கரீம் மீது, தற்போது இவ்வளவு பெரிய தொகையை மோசடி செய்ததும், ஒரு பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டியதும் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ளதாகக் கருதப்படும் நடிகரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.