பட்டா மாறுதலுக்கு ரூ.7,000 லஞ்சம்... விஏஓ கைது!

 
பாக்கிய லட்சுமி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டா மாறுதலுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.7,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச் செல்வம். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் தனது பெற்றோர் பெயரில் இருந்த நிலத்தை தனது பெயருக்கு மார்ச் 27ல் பத்திரப் பதிவு செய்தார். இந்த நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் துரைப் பாண்டியை (46) அணுகினார்.

இளம் நடிகர் கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதால் ரூ.3,000 குறைத்துக் கொண்டு ரூ.7,000 கொடுத்தால் பட்டாவுக்குப் பரிந்துரைக்கப்படும் என துரைப் பாண்டி கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மலைச்செல்வம் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அவர்களின் ஆலோசனைப்படி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குச் சென்ற மலைச்செல்வம், துரைப்பாண்டியிடம் ரூ.7,000 கொடுக்க முயன்றார். அவர் வாங்காமல், உடனிருந்த உதவியாளரான கச்சிராயன்பட்டி பாக்கிய லட்சுமியிடம் (39) கொடுக்குமாறு கூறினார்.

அவரிடம் மலைச் செல்வம் பணத்தை கொடுத்த போது அருகில் மறைந்திருந்த கூடுதல் டிஎஸ்பி சத்ய சீலன் தலைமையிலான ஆய்வாளர்கள் ரமேஷ் பிரபு, குமர குரு ஆகியோர் கையும் களவுமாகப் பிடித்து இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web