ஒரே நாளில் சந்தையில் ரூ.80,00,000/- ஆடுகள் விற்பனை!

 
ஒரே நாளில் சந்தையில் ரூ.80,00,000/- ஆடுகள் விற்பனை!


திண்டுக்கல் மாவட்டத்தில் நாகல்நகர் சந்தை சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலம். இந்த சந்தையில் வெள்ளோடு, கொடை ரோடு, நிலக்கோட்டை, நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, வடமதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடுகள், கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

ஒரே நாளில் சந்தையில் ரூ.80,00,000/- ஆடுகள் விற்பனை!

திண்டுக்கல் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள்.பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டன. இதனை வாங்குவதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் சந்தையில் குவிந்தனர்.

சென்ற வாரத்தில் ரூ.5000 முதல் ரூ.10000 வரை விற்கப்பட்ட ஆடுகள், இந்த வாரம் அதிகபட்சமாக ரூ.30000 வரை விலை போனது. ஆட்டின் எடையை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஒரே நாளில் சுமார் ரூ80,00,000/- வரை விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்ததால் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web