சிப் தயாரிப்பில் ரூபாய் 8,195 கோடி முதலீடு !!

 
சிப்


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிப் தயாரிப்பு நிறுவனமான பாலி மேடெக், சிப் தயாரிப்புத் தொழிலில் ஒரு பில்லியன் டாலர் அதாவது ஆயிரத்து 195 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரி வித்துள்ளது.இது தொடர்பாக இந் நிறுவனத்தின் தலைவர் ஈஸ்வரராவ் நத்தம் கூறியதாவது...சிப் தயாரிப்புத்தொழிலில் வரும் 2026ம் ஆண்டுக்குள் ஆயிரத்து 195 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து, தொழில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். இதில் சிப் தயாரிப்பு மட்டுமின்றி, செமி கண்டக்டர் உற்பத்தியும் இடம் பெறும்.

செஇ

இப்போதைய சூழலில் எங்கள் நிறுவனம் ஆண்டுக்கு 30 கோடி சிப்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஆண்டுக்கு ஆயிரம் கோடி சிப்கள் என்ற உற்பத்தி இலக்கை எட்டும் எங்களது தொழிற்சாலை சென்னையில் உள்ளது. எங்களது அடுத்த  உற்பத்தி தொழிற்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைகிறது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து செப்டம்பரில் இருந்து உற்பத்தித் தொடங்கும். இதற்கான அடிப்படை கட்டமைப்புப் பணிகள் முடித்துள்ளன. இந்த முயற்சியால் வரும் டிசம்பர் இறுதிக்குள் எங்கள் நிறுவனத்தின் சிப் உற்பத்தி 200 கோடி என்ற இலக்கை எட்டும்.

சிப்


இப்போது நாங்கள் உற்பத்தி செய்யும் ஆப்டோ செமி கண்டக்டர்கள், சிப் ஆகியவை மின் விளக்கு கள் உற்பத்தி, மருத்துவ கருவிகள் உருவாக்கம், உணவு சுத்திகரிப்பான் மற்றும் பாதுகாக்கும் தொழிற் துறைகள் என்று பல்வேறு துறைகளிலும் பயன்ப டுத்தப்படுகிறது.இதனால், தேவை அதிகம் உள்ளதால், விரைவில் சந்தை விரிவாக்கம் நிகழ்கிறது என்றார். இப்போது இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்புத் தொழில் தோராயமாக 110 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. வரும் 2030ம் ஆண்டில் இதன் சந்தை மதிப்பு 180 லட்சம் கோடியே 30 லட்சத்து 210 கோடி ரூபாயாக இருக்கும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web