"பெற்ற பிள்ளைகளை நடுரோட்டில் விட்டவர்" - முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!

 
ஆர்.எஸ்.பாரதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய்யை குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசினார்.

பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிய ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் விஜய்யின் குடும்ப விவகாரங்களை முன்வைத்துத் தனது விமர்சனங்களை அடுக்கினார். "பெற்ற தாய், தந்தை மற்றும் கட்டிய மனைவிக்குச் சோறு போடாமல், பெற்ற பிள்ளைகளை நடுரோட்டில் விட்டுவிட்டு, மன்றத்திற்கு வந்து 'நான் அப்பாவைத் தேடுகிறேன்' என்று கேட்கிற ஒருவருக்கு, தன் அப்பாவின் புகழும் பெருமையும் ஒருபோதும் தெரியாது" என்று அவர் தமிழக முதலமைச்சரை நேரடியாகத் தாக்கிப் பேசினார்.

ஆர் எஸ் பாரதி

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் ரீதியான வார்த்தைப் போர்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சரின் தனிப்பட்ட குடும்பச் சூழலை மையமாக வைத்து இந்த விவாதத்திற்குரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமர்சனத்திற்குத் தவெக தரப்பிலிருந்து என்ன மாதிரியான எதிர்வினைகள் வரப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.