தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்புக்கு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு - 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைப்பு!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழகத்தில் போதைப்பொருள்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் உயரிய நோக்கில், ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துக் கடத்தல் வழிகளையும் கண்காணித்து போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த 65 சிறப்பு அதிரடிப்படைகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் 37 நிர்வாக மாவட்டங்களிலும் தலா ஒரு சிறப்புப் படை அமைக்கப்படும்.

தலைநகர் சென்னையில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் கள நடவடிக்கைகளுக்காக 12 சிறப்புப் படைகள் அமைக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய மாநகரங்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தலா 2 சிறப்புப் படைகள் நியமிக்கப்பட உள்ளன.

இந்தச் சிறப்பு அதிரடிப்படைகள் மூலம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களின் அருகில் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பதுடன், சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் வலையமைப்பை உடைக்க தீவிர சோதனைகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.