போலீசுக்கு பயந்து பைக்கில் வேகம்! கீழே விழுந்த மனைவியைத் தவிக்கவிட்டு தப்பிய கணவர்... வைரல் வீடியோ!
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபூரில், போக்குவரத்து போலீசாரின் சோதனையின்போது தப்பிக்க முயன்ற நபர், பைக்கில் இருந்து கீழே விழுந்த மனைவியை அங்கேயே விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ருத்ரபூரில் உள்ள திரிசூல் சவுக் பகுதியில், ஹெல்மெட் மற்றும் வாகனப் பதிவு எண் தொடர்பாக போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கில் வந்த நபர், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க முயன்று பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். ஆனாலும் பைக்கை நிறுத்தாமல் குழந்தையுடன் அந்த நபர் அங்கிருந்து சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து போலீசார் கீழே விழுந்த பெண்ணுக்கு உதவினர். இந்தச் சம்பவம் குறித்து இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
