LPG சிலிண்டர் அக்.1 முதல் வெளியான ரூல்ஸ்.. மக்களே இத உடனே பண்ணுங்க
மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் தகுதியான நுகர்வோரை மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இதன் அடிப்படையில், எல்பிஜி சிலிண்டர் பெற விரும்பும் நுகர்வோர் அனைவரும் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் எரிவாயு பெறுவதற்கும், சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 27.43 கோடி நுகர்வோர் அதாவது சுமார் 89.9 சதவீதம் பேர் இந்த ஆதார் அங்கீகாரப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்தச் சரிபார்ப்பை ஏற்கனவே முடித்தவர்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. இந்த அங்கீகாரத்தை இதுவரை முடிக்காத மீதமுள்ள நுகர்வோர் உடனடியாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் தங்களது பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்வதற்குப் பல்வேறு எளிய வழிகள் வழங்கப்பட்டுள்ளன: சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில், டெலிவரி செய்பவர் மூலமாகவே அந்த இடத்திலேயே அங்கீகாரத்தை நிறைவு செய்யலாம். நுகர்வோர் தங்களது எல்பிஜி விநியோக ஷோரூமிற்கு நேரில் சென்றும் இந்தச் சரிபார்ப்பை முடிக்கலாம்.
நுகர்வோர் தங்களது வீடுகளில் இருந்தபடியே சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகளைப் பயன்படுத்தியும் இதனைச் செய்ய முடியும். இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் 'IndianOil' செயலி மூலமாகவும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 'Hello BPCL' செயலி மூலமாகவும், எச்பி கேஸ் (HP Gas) வாடிக்கையாளர்கள் 'HP Pay' செயலி மூலமாகவும் இந்த அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம்.
