ரயிலில் தீ பரவியதாக வதந்தி... அலறியடித்துக் குதித்த பயணிகள்... எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி!

 
ரயில் விபத்து ரயில் விபத்து

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயிலில் தீ பரவல் வதந்தி காரணமாகப் பயணிகள் 4 பேர் கொடூரமான முறையில் தண்டவாளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா இரயில்வே நிலையப் பகுதி அருகே பயணிகள் ரயில் ஒன்று வழக்கம் போல் அதிவேகமாகத் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது. ரயில் நடுவழியில் போய்க் கொண்டிருந்த, "ரயிலின் பின் பக்கப் பெட்டியில் படுபயங்கரமான முறையில் தீப்பிடித்து எரிகிறது" என்று யாரோ மர்ம நபர் கிளப்பிவிட்ட வதந்தி ஒட்டுமொத்த ரயிலிலும் காட்டுத்தீயாய் பரவியுள்ளது.

தற்கொலை தண்டவாளம் ரயில்

இந்தத் திடீர் வதந்தியைக் கேட்டுப் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அனைவரும் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தில் அலறியடித்துள்ளனர். போதிய விழிப்புணர்வின்றிப் பதற்றமடைந்த சில பயணிகள், ஓடிக்கொண்டிருந்த ரயிலின் அவசரக் கதவுகள் மற்றும் ஜன்னல் வழியே வெளியே இருந்த இருட்டு தண்டவாளப் பகுதிக்குள் அடுத்தடுத்துக் குதித்துள்ளனர்.

அப்படிப் பயணிகள் ரயிலில் இருந்து கீழே குதித்த நேரத்தில், துரதிர்ஷ்டவசமாகப் பக்கத்துத் தண்டவாளத்தில் ஒரு பிரம்மாண்ட 'விரைவு ரயில்' மின்னல் வேகத்தில் எதிரே வந்துள்ளது. ரயிலில் இருந்து கீழே குதித்துத் தண்டவாளத்தில் விழுந்த பயணிகள் மீது, கண்சிமிட்டும் நேரத்திற்குள் அந்த விரைவு ரயில் ஏறிச் சென்றது.

ரயில் தண்டவாளம் தற்கொலை

இந்த அதிபயங்கர விபத்தின் தாக்கத்தில், ரயிலில் இருந்து குதித்த 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில்  துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், தண்டவாளத்தில் விழுந்த பல பயணிகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருவதாகத் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொரேனா ரயில்வே போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.