”உயிர் பிழைக்க ஓடிடுங்கள்”.. காசா மக்களை எச்சரித்த இஸ்ரேல்..!!

 
இஸ்ரேல் ஹமாஸ்
தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் நாட்டில் போர் காரணமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில்  தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் வசம் பிணையக் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கும் முயற்சியிலும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.

இஸ்ரேல்

தாக்குதலை ஒரு பக்கம் தீவிரப்படுத்தும் இஸ்ரேல், மறுபுறம் பிணையக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. போர் 3ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், காசாவில் இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் முடங்கின. இதனால் அங்குள்ள 23 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஹமாஸ் சுரங்கங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் - காசா இடையே போர்

வடக்கு காசா பகுதியில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் இதனால் பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
 

From around the web