கணவனின் நண்பருடன் ஓட்டம்... கல்யாண போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்ததால் சிக்கிய இளம்பெண்!

 
திருமணம் திருமணம்

கர்நாடக மாநிலம் பன்னங்காடி பகுதியில், கணவனின் நண்பரையே காதலித்து மணம் முடித்ததோடு, அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்து கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பன்னங்காடியைச் சேர்ந்த 24 வயதான ரக்ஷிதா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாகர் என்ற ஆட்டோ ஓட்டுநரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், சாகரின் நண்பரான இந்திரா என்பவருடன் ரக்ஷிதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

செல்போன் வீடியோ  இளம்பெண் பாலியல்

இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியுள்ளது. கணவனுக்குத் தெரியாமல் தனது காதலை வளர்த்து வந்த ரக்ஷிதா, திடீரென ஒருநாள் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு இந்திராவுடன் தலைமறைவானார்.

மறைவாக வாழ்ந்து வந்த ரக்ஷிதாவும் இந்திராவும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இந்திரா தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றினார். அதில், ரக்ஷிதா தனது காலின் மீது காலை வைத்திருப்பது போன்ற நெருக்கமான காட்சி இடம்பெற்றிருந்தது.

ஆபாசம் காதல் கள்ளக்காதல் இளம்பெண்

தேடுதல் வேட்டையில் இருந்த கணவர் சாகர், இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தனது நண்பனே தன்னுடைய மனைவியைக் கூட்டிச் சென்று மணம் முடித்ததை அறிந்த அவர், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட இரண்டே ஆண்டுகளில், கணவனின் நண்பருடனேயே பெண் வெளியேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் விவாதப் பொருளாகியுள்ளது.