டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு: 95 ரூபாயைத் தாண்டி வர்த்தகம்!

 
டாலர் டாலர்

சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் பலம் அதிகரித்து வருவதன் காரணமாக, அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

சர்வதேசப் பொருளாதாரக் காரணிகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் போன்ற சூழல்களால் டாலரின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வர்த்தக அமர்வுகளில் ஒரு டாலருக்கு நிகராக 94 ரூபாய் 94 காசுகள் என்ற அளவில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, மேலும் சரிவடைந்து இன்று 95 ரூபாய் 20 காசுகள் என்ற புதிய சரிவை எட்டியுள்ளது.

டாலர் ரூபாய் வீழ்ச்சி சரிவு

உலகளாவிய சந்தைகளில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக டாலரை நோக்கி நகர்வது.

இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து அன்னிய முதலீடுகள் கணிசமாக வெளியேறி வருவதும் ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

டாலர்

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து 95 ரூபாய்க்கும் மேல் சரிந்து வருவது, இந்தியாவின் இறக்குமதி செலவினங்களை, குறிப்பாகக் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவை அதிகரிக்கச் செய்யும் என்பதால் பொருளாதார வல்லுநர்கள் இந்நகர்வை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.