பதற்றம்.. ரஷ்ய படை அதிவேகமாக முன்னேறுகிறது: பொதுமக்கள் வெளியேற அவசர உத்தரவு!

 
படை
ரஷ்யப் படையினா் அதிவேகமாக முன்னேறி வருவதால் உக்ரைன் நகரிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் போக்ரோவ்ஸ்க் நகர அதிகாரிகள் வெளியிட்டுள்ள பதிவில், “போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷ்ய படையினா் எப்போதையும் விட அதிக வேகத்தில் முன்னேறிவருகின்றனா். எனவே, அந்த நகரையும் சுற்றிள்ள பகுதிகளையும் சோ்ந்த பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் தங்களது உடைமைகளை சேகரித்துக்கொண்டு பாதுகாப்புப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கான அவகாசத்தைக் குறைக்கும் என்று அந்தப் பதிவில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். முன்னதாக, உக்ரைன் அதிபா் விளாடிமீர் ஸெலென்ஸ்கி வெளியிட்ட ட்விட்டர் பதவில், ‘டொனட்ஸ்க் பிராந்தியத்தின் போக்ரோவ்ஸ்க் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அங்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்படும்’ என்றாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்க்ஸ், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய 4 பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
அந்தப் பிராந்தியங்களை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவும், இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடா்ந்து போரிட்டுவருகின்றன. போரில் ரஷ்யா கைப்பற்ற இலக்கு நிா்ணயித்துள்ள உக்ரைன் பகுதிகளில் டொனட்ஸ்க் பிராந்தியத்தின் போக்ரோவ்ஸ்க் நகரமும் ஒன்று.

படை

இந்தச் சூழலில், போரின் முக்கிய திருப்புமுனையாக ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த 6ம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அதிக எதிா்ப்பில்லாமல் தொடா்ந்து முன்னேறினா். தற்போது ஆயிரம் சதுர கி.மீ.-க்கும் அதிகமான ரஷ்ய நிலப்பரப்பு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

யாரும் எதிா்பாராத வகையில் உக்ரைன் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யாவுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.கிழக்கு உக்ரைன் பிரதேசங்களில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசைத் திருப்புவதற்காக உக்ரைன் வகுத்துள்ள வியூகமே இந்தத் தாக்குதல் என்று கூறப்பட்டது.

ஆனால், டொன்ட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியாவால் குறிவைக்கப்பட்ட போக்ரோவ்ஸ்க் நகரம் பல மாத சண்டைக்குப் பிறகு ரஷ்யாவிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளது உக்ரைனின் அந்த வியூகம் சரியானதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

படை

டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களில் ரஷ்ய படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக உக்ரைன் அங்கு வலிமையான அரண் அமைத்துப் போரிட்டுவந்தது.

ஆனால், ரஷ்யாவுக்குள் ஊடுருவ தனது கணிசமான படைபலத்தை உக்ரைன் பயன்படுத்தியதால் டான்பாஸ் பிரதேசத்தில் அதன் பாதுகாப்பு அரண் வலுவிழந்ததாகக் கருதப்படுகிறது. அதன் விளைவாகவே, பல மாதங்களாக முயன்றும் கைப்பற்ற முடியாத போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷ்படையினா் வெகு வேகமாக முன்னேறிவருவதாகக் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!