ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதல்... மின்சாரத்தை முழுவதுமாக துண்டித்த உக்ரைன்!

 
ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை உக்ரைன் அரசு முழுவதுமாக துண்டித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் உள்கட்டமைப்பைத் தாக்கி வருகிறது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

சமீபத்தில் ரஷ்யா, உக்ரைனின் உள்கட்டமைப்பைத் தாக்கி வருகிறது. இது தொடர்பாக ரஷ்யப் படைகள் நேற்று உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு வசதிகளை குறிவைத்து பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதன் விளைவாக, முன்னெச்சரிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதை உக்ரைன் எரிசக்தி அமைச்சர் ஹெர்மன் ஹலுசென்கோ தெரிவித்தார். எதிரி நாடு (ரஷ்யா) உக்ரைன் மக்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அவர் கூறினார். மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அந்தந்த தங்குமிடங்களில் தங்கவும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பின்பற்றவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனமான உக்ரெனெர்கோ, கார்கிவ், சுமி, பொல்டாவா, சபோரிஷியா, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் கிரோவோஹ்ராட் ஆகிய இடங்களில் அவசர மின்வெட்டுகளை அமல்படுத்தியுள்ளது.

உக்ரைனின் விமானப்படை ரஷ்யாவால் ஏவப்பட்ட பல ஏவுகணைகளைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web