அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா.. உக்ரைனில் 5பேர் உயிரிழந்த சோகம்!

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளின் இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவுடன் உக்ரைன் இராணுவம் போரை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா இரவில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்று, உக்ரைனின் பொல்டாவா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில், கட்டிடத்தின் இடிபாடுகளில் 4 பேர் இறந்தனர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து சுமார் 21 பேர் மீட்கப்பட்டனர். இதேபோல், உக்ரைன் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் இடிபாடுகளில் விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் நேற்று இரவு மட்டும் 5 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யாவிற்கு எதிராகவும் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில், ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் 9 ட்ரோன்களை இடைமறித்து அழித்தன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!