உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 25 மாடி கட்டிடம் சேதம்; ஒருவர் பலி!

 
உக்ரைன்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 25 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது.

 

கீவின் சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் கட்டிடத்தின் முகப்புப் பகுதி மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன. அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் தீ விபத்தும் ஏற்பட்டது. மேலும், நகரின் பிற பகுதிகளிலும் கட்டிடங்கள் மற்றும் மெட்ரோ நிலையம் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ரஷியா ஏவிய 269 டிரோன்களில் 243 டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.