உக்ரைன் எல்லையில் இருந்து வடகொரிய வீரர்களை திரும்பப் பெற்ற ரஷ்யா!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகின்றன. அவர்கள் ஆயுதப் பொருட்களையும் பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றனர். அதேபோல், ரஷ்யாவின் நட்பு நாடான வட கொரியா, 10,000க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியது. உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் எல்லைக்கு அருகில் ரஷ்யா அந்த வீரர்களை நிறுத்தியது.
ஆனால் அவர்களால் உக்ரைன் தாக்குதலையும் மோசமான வானிலையையும் தாங்க முடியவில்லை. இதன் விளைவாக, சுமார் 4,000 வட கொரிய வீரர்கள் காயமடைந்தனர். எனவே, அவர்கள் அனைவரும் குர்ஸ்க் எல்லையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உக்ரைனின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் கிண்ட்ராடென்கோ கூறுகையில், ’உக்ரைன் தாக்குதலில் பலர் இறந்த பிறகு ரஷ்யா வட கொரிய வீரர்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்’ என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!