அமைதி ஒப்பந்தம்? உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க புதின் உத்தரவு!

 
russia

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்க அமெரிக்கச் சிறப்புத் தூதர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதல்களை அடுத்த மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 5 நள்ளிரவு முதல் இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அமைதி முயற்சிகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல்கள் முடிவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.