வைரலாகும் வீடியோ... இளையராஜாவின் பாடலுக்கு நடனமாடி ராஜாவை வியக்க வைத்த ரஷ்ய கலைஞர்கள்!

 
இளையராஜா

 சென்னையில் இளையராஜாவின் ஸ்டூடியோவில், அவரது இரு பாடல்களுக்கு ரஷ்ய நாட்டு கலைஞர்கள் நடனமாடி இளையராஜாவை நெகிழ வைத்தனர்.‘மீரா’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ பட்டர்ஃப்ளை’ மற்றும் ‘சொல்லத் துடிக்குது மனசு’ படத்தில் இடம்பெற்ற ‘பூவே செம்பூவே’ ஆகிய இரண்டு பாடல்களுக்கும் ரஷ்ய நாட்டு கலைஞர்கள் நளினமாக நடனமாடிய நிலையில், இந்த நடன வீடியோவை நெகிழ்ச்சியுடன் இளையராஜா அவரது முகபுத்தகத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.அந்த ரஷ்யக் கலைஞர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, “ரஷ்யாவில் இருந்து வந்து எனது ஸ்டூடியோவில் சிறப்பான நிகழ்ச்சியை நிகழ்த்திய நடனக் கலைஞர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். அவர்களின் நடனம் நளினமாக, உணர்வுபூர்வமானதாக, இதயத்தை தொடுவதாக, குற்றம் குறை ஏதுமின்றி வசீகரிக்கக் கூடியதாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா பாடலுக்கு புதிய ஆப் அறிமுகம்!!

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய நடனக் குழுவை இளையராஜா ஸ்டூடியோவில் நடனம் ஆட ஏற்பாடு செய்தவர், இந்திய - ரஷ்ய கலாச்சார மையத்தின் பொதுச் செயலாளர் பி.தங்கப்பன். இளையராஜா பாடலுக்கு மேற்கத்திய பாணியில் அந்தக் குழு நடனமாடியது.

“இளையராஜா இசையில் நிறைந்துள்ள மெல்லிசையின் மேன்மையால் ஈர்க்கப்பட்டோம். அவரது இசையில் அமைந்த பாடல்களுக்கு நடனமாடியதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார் ரஷ்ய நடனக் குழுவின் தலைவர் கலீனா.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!