கள்ளத்தொடர்பில் இருந்த கணவனின் மர்ம உறுப்பைக் கடித்துத் துப்பிய மனைவி - ரஷ்ய நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!

 
மர்ம  உறுப்பைக் கடித்து துப்பிய  மனைவி

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகத் தவறாகச் சந்தேகப்பட்டு, நள்ளிரவில் கணவனின் ஆணுறுப்பைக் கடித்துத் துண்டித்த 39 வயது பெண்ணுக்கு ரஷ்ய நீதிமன்றம் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொடூரச் சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் விசாரணையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ரஷ்யாவைச் சேர்ந்த 39 வயதான பெண், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இரகசியத் தொடர்பில் இருப்பதாகத் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கணவரைப் பழிவாங்கத் திட்டமிட்ட அந்தப் பெண், தனது பற்களைக் கூர்மையாக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நள்ளிரவில் கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவரது மர்ம உறுப்பைக் கடித்துத் துண்டித்துள்ளார். கணவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரஷ்யக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பாதிக்கப்பட்ட கணவர் மீது மனைவி கொண்ட சந்தேகம் முற்றிலும் தவறானது என்றும், அவர் எந்தவொரு பெண்ணுடனும் கள்ளத்தொடர்பில் இருக்கவில்லை என்றும் மருத்துவ மற்றும் விசாரணை அறிக்கைகளில் உறுதி செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திட்டமிட்டு இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது நிரூபணமானதால், அந்தப் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். தற்போது அந்தப் பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த கணவர் சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்து, தனது 7 வயதுக் குழந்தையைத் தனியாக வளர்த்து வருகிறார். குடும்ப தகராறில் சந்தேகத்தின் பேரில் நடந்த இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.