அதிர்ச்சி... 4 மாதம் கடுமையான தலைவலி... ரஷ்யர் கண்ணுக்குள் முளைவிட்ட விதை!

 
ரஷ்யா

 

ரஷ்யாவைச் சேர்ந்த 42 வயது நபரின் கண்ணுக்குள் செடியின் விதை முளைவிட்டு வேர்விட்ட சம்பவம் மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நான்கு மாதங்களாகத் தொடர்ந்து தலைவலி, கண் சிவத்தல் மற்றும் இரட்டைப் பார்வை பாதிப்பால் அவதிப்பட்ட அவருக்கு, மருத்துவப் பரிசோதனையில் இந்த வினோத பாதிப்பு கண்டறியப்பட்டது.

சைபீரியாவைச் சேர்ந்த மேக்சிம் ஸ்லெப்ட்சோவ் என்ற அந்த நபர், கோடை விடுமுறையின்போது நண்பருடன் மீன்பிடிக்கவும் பழங்கள் பறிக்கவும் சென்றுள்ளார். அப்போது மரக்கிளை ஒன்று அவரது கண்ணில் பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் வலியைத் தொடர்ந்து, கண்ணைக் கழுவி அதிலிருந்த சிறிய மரத்துண்டை அகற்றியுள்ளார். ஆனால், கண்ணுக்குள் சிக்கியிருந்த ஒரு சிறிய விதை வெளியேறாமல் தங்கியுள்ளது.

அடுத்த நான்கு மாதங்களில் அந்த விதை முளைத்து, சுமார் 3 மில்லிமீட்டர் நீள வேரை உருவாக்கியுள்ளது. அந்த வேர் கண்ணின் வெள்ளைப் பகுதியை மூடியிருக்கும் மெல்லிய சவ்வான கான்ஜங்டைவா திசுவுக்குள் ஊடுருவியிருந்தது.

A 42-year-old Russian man found a sprouted seed growing inside his eye after suffering months of severe headaches. : r/interestingasfuck

யாகுட்ஸ்க் நகரில் உள்ள கண் மருத்துவமனையில், கண் அறுவை சிகிச்சை நிபுணர் எலிசவெட்டா கார்போவா உள்ளூர் மயக்க மருந்து செலுத்தி ஊசி மூலம் விதையை அகற்றினார். சிகிச்சைக்குப் பிறகு மேக்சிமின் தொடர் தலைவலி உடனடியாகக் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிப்பைத் தனது மருத்துவப் பணியில் இதுவரை சந்தித்ததில்லை என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.