ரஷ்யாவின் வோஸ்டோக் பிரதான குழாய் வழியாக முதல் கச்சா எண்ணெய் விநியோகம் தொடக்கம்!

 
ரஷ்யா வோஸ்டோக் பிரதான குழாய் வழி திட்டம் செவர் பே கச்சா எண்ணெய் விநியோகம் தொடக்கம்!

ரஷ்யாவில் ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் மாபெரும் 'வோஸ்டோக் ஆயில்' திட்டத்தின் கீழ், கச்சா எண்ணெய் விநியோகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வான்கோர் மற்றும் பயாக்கா எண்ணெய் வயல்களை இணைக்கும் பிரதான குழாய் வழியாக, செவர் பே முனையத்திற்கு முதன்முறையாகக் கச்சா எண்ணெய் விநியோகம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 7 பில்லியன் டன் அளவிலான உயர்தர ஹைட்ரோகார்பன் வளங்களைக் கொண்டுள்ள இத்திட்டம், உலகின் மிகப்பெரிய ஆற்றல் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஷேர் ஆயில் தொழிற்சாலை எண்ணெய்

இப்பிராந்தியத்தின் மூலமாக ஆர்க்டிக் கடல் வழியாகச் சர்வதேச சந்தைகளுக்கு எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.