சவுக்கு சங்கர் ஆதரவாளர் வழக்கறிஞர் மீது சரமாரி தாக்குதல்.!!

 
சவுக்கு சங்கர் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
சவுக்கு சங்கர் யூடியூப் சேனலின் அட்மின் சூர்யா மற்றும் ப்ரதீப்புடன் பேசிய வழக்கறிஞர் ராஜாவை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. வழக்கறிஞரான இவர் சவுக்கு சங்கர் ஆதரவாளராக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் மீடியாவை சேர்ந்த சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் ராஜாவை சந்திப்பதற்காக வேலாயுதம்பாளையம் வந்துள்ளனர். இந்த மூன்று பேரும் வேலாயுதம்பாளையம் பாலத்துரை பகுதியில் உள்ள பேக்கரியில் வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

சவுக்கு சங்கர்,கரூரில் பரபரப்பு...சவுக்கு சங்கர் ஆதரவாளர் மூவருக்கு அரிவாள்  வெட்டு! - three people associated with chavku shankar were slashed with  sickle in karur - Samayam Tamil

அப்போது, ஒரு காரில் வந்த இறங்கிய அடையாளம் தெரியாத 6 பேர்கள் வழக்கறிஞர் ராஜா மற்றும் சூரியா, பிரதீப் ஆகிய மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில், வழக்கறிஞர் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பித் தாக்க, 6 பேரும் அவர்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களை துரத்திக் கொண்டு சென்ற இருவரும் தப்பியோடிய மர்ம நபர்கள் மீது பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில், பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ராஜா வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர்: Supporters of Savukku Shankar attacked by unknown  assailants in Karur

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும் சவுக்கு சங்கர் ஆதரவாளர்கள் கரூர் பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web