சபரிமலையில் சோகம்: மலை ஏறியபோது மாரடைப்பால் ஆந்திர பக்தர் திடீர் உயிரிழப்பு!
Nov 18, 2026, 13:00 IST
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநில பக்தர், மலை ஏறும்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம்பாபு (45), ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலைக்கு வந்துள்ளார். மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைதடுமாறிய அவர், அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக அவரை மீட்டு, அருகிலுள்ள அவசர சிகிச்சை மையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராம்பாபு உயிரிழந்தார்.

ஐயப்பனை தரிசிக்க ஆர்வத்துடன் வந்த பக்தர், மலைப்பாதையிலேயே உயிரிழந்த சம்பவம் சக பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
