சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு: பம்பை நதியில் ஆடைகளை வீசினால் ரூ.5,000 உடனடி அபராதம்!

 
பம்பை

 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராடிவிட்டு, தாங்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை ஆற்றில் வீசிச் சென்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

ஆற்றில் ஆடைகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதால் ஆற்றுநீர் மாசடைவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்துப் பம்பை ஆற்றில் ஆடைகளை வீச வேண்டாம் என பக்தர்களுக்குக் கேரள முதல்வர் 6 மொழிகளில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பம்பை மற்றும் அதன் துணை நதிகள், நீராடும் படித்துறைகள் மற்றும் பொது இடங்களில் ஆடைகள், பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக சபரிமலை கூடுதல் ஆட்சியர் திலீப் கே.கைனிக்கரா அறிவித்துள்ளார்.

சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

இந்த உத்தரவை மீறுவோருக்கு ரூ.5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும், 15 நாட்களுக்குள் அபராதத்தைச் செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.