சபரிமலை மண்டல பூஜை தரிசனம்.. ஆன்லைன் முன்பதிவு நாளை மறுநாள் முதல் தொடக்கம்!

 
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை மறுநாள் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது எனத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை கூட்டம்

இந்த ஆண்டின் மண்டல மற்றும் மகரவிளக்கு மண்டலப் பூஜை காலம் வரும் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களின் தரிசன நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நிலக்கல், பம்பை வழியாக தினமும் 60,000 பக்தர்களுக்கு அனுமதி. எருமேலி பெருவழிப்பாதை வழியாக தினமும் 3,000 பக்தர்கள். வண்டிப்பெரியாறு (சத்திரம் பாதை) வழியாக தினமும் 3,000 பக்தர்கள்.

சபரிமலை

ஆன்லைன் முன்பதிவு தவிர, நிலக்கல், எருமேலி மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் நேரடி முன்பதிவு மையங்களும் செயல்படும். பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், சிரமமின்றித் தரிசனம் செய்யவும் முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்து வருமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.