சபரிமலை மண்டல பூஜை தரிசன ஆன்லைன் முன்பதிவு அக்.29 காலை 10 மணிக்குத் தொடக்கம்!

 
சபரிமலை கூட்டம்

 

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக் கால தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் 29-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. நவம்பர் 16-ம் தேதி மண்டல பூஜைக் காலம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

பக்தர்கள் www.sabarimalaonline.org இணையதளத்தில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யலாம். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், நிலக்கல்–பம்பை வழியாக நாள்தோறும் 60,000 பக்தர்களுக்கும், எருமேலி மற்றும் வண்டிப்பெரியாறு–சத்திரம் வழித்தடங்களில் தலா 3,000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை

நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் நேரடி முன்பதிவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு விதிமுறைகள் மற்றும் அனுமதி விவரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.