டிசம்பர் 25 வரை சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு நிறைவு: பக்தர்கள் கவனத்திற்கு!

 
சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 25-ம் தேதி வரை சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, உடனடி முன்பதிவு மூலம் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த சீசனில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 66 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 14 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம் 25-ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே முடிவெடுக்க முடியும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

முன்பதிவு செய்த நாளில் வர இயலாத பக்தர்கள் தங்களது முன்பதிவை ரத்து செய்யுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அவ்வாறு ரத்து செய்யப்படும் இடங்களை உடனடி முன்பதிவு மூலம் பிற பக்தர்களுக்கு வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.