சபரிமலையில் நாளை இரவு வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி !

 
சபரிமலை

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது.  மகரவிளக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14ம் தேதி மாலை நடைபெற்ற  நிலையில், நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை வரும் நாளையுடன்  ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை

இதன்படி நாளை மாலை 6 மணி வரை மட்டுமே பம்பையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  தொடர்ந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனக்  கூறப்படுகிறது.  இதனையடுத்து ஜனவரி 20ம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினர் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.

சபரிமலை

பின்னர் மாலை 6.30 மணிக்கு பூஜை நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது. அத்துடன் நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை வழிபாட்டு காலம் நிறைவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!