இன்று மாலை சபரிமலை நடை திறப்பு!!

 
சபரிமலை

சபரி மலை ஐயப்பன் கோவில் மாதப்பிறப்பு சிறப்பு பண்டிகை நாட்களில் மட்டுமே நடை திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில்  ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை ஆகஸ்ட் 10ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.  

ஐயப்பன் சபரிமலை இருமுடி

இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று ஆகஸ்ட் 9ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த பூஜைக்கான நெற்கதிர் கட்டுகள் அச்சன்கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக எடுத்துவரப்படும். அத்துடன்  பட்டு வஸ்திரம் சுற்றப்பட்ட 51 நெற்கதிர் கட்டுகள், அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரணப்பெட்டி ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றி தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்  இந்த நெற்கதிர்களுக்கு இன்று மாலை 3 மணியளவில் பம்பை கணபதி கோவிலில் பூஜை செய்யப்படும்.  விரதமிருந்து சபரிமலை  வரும் 51 பக்தர்கள் மூலமாக 51 நெற்கதிர் கட்டுகளும் சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்படும்.

சபரிமலை

இந்த நெற்கதிர் கட்டுக்களை  பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேவசம்போர்டு அதிகாரிகள் பெற்றுக்கொள்வர்.   நாளை காலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட உள்ளன.  நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு நாளை முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  இதற்கான ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே  சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும்,  இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் எனவும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web