பகீர்... சபரிமலையில் போலி நெய்... அமைச்சர் குற்றச்சாட்டு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 'மில்மா' கூட்டுறவு நிறுவனம் சார்பில் விநியோகிக்கப்பட்ட நெய்யில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. அங்கு விநியோகம் செய்யப்பட்ட நெய்யில் 90% மேலானவை முற்றிலும் போலியானது எனத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த போலி நெய்யானது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 40% கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூரமான மோசடி சம்பவம் பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காரியம் குறித்துக் கேரள பால்வளத் துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உரிய தரப் பரிசோதனை எதுவுமே செய்யப்படாமல் இந்த நெய் நேரடியாகச் சன்னிதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த மிகப்பெரிய முறைகேட்டில் தேவஸம் போர்டு மற்றும் மில்மா ஊழியர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. புனிதமான வழிபாட்டுப் பொருளில் இதுபோன்ற போலித்தனம் செய்யப்பட்டது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பக்தர்களின் நம்பிக்கையைச் சூறையாடும் வகையில் நடைபெற்ற இந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். போலி நெய் விநியோகத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
