ஓணம் ஸ்பெஷல்... சபரிமலை நடை திறப்பு!

 
சபரிமலை

 

ஓணம் பண்டிகையைக் முன்னிட்டுச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. கோயில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையைத் திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து பதினெட்டாம் படிக்குக் கீழே உள்ள ஆழியில் தீ மூட்டப்படும்.

சபரிமலை விஷூ கனி ஐயப்பன்

உத்திராட நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். உத்திராடம், திருவோணம், அவிட்டம் மற்றும் சதயம் ஆகிய சிறப்பான நாட்களில் கோயிலில் சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

இதனைத் தொடர்ந்து, ஓணம் பண்டிகை நாளான வரும் 26-ஆம் தேதி அன்று சபரிமலைக்குத் தரிசனத்திற்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பிரம்மாண்டமான முறையில் 'ஓண சத்யா' (ஓண விருந்து) வழங்கப்பட உள்ளது. ஓணம் திருவிழா சிறப்புப் பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 10 மணிக்குக் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.