ஓணம் பூஜைகள் நிறைவு... சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு!
Updated: Aug 30, 2026, 06:46 IST
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நிறைவு: ஓணம் சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்து கோயில் நடை அடைக்கப்பட்டது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. திருவோண நாளில் பக்தர்களுக்குச் சிறப்பு ஓண விருந்து வழங்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அடுத்ததாகப் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குக் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
