சோகம்.. சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 21 பேர் பரிதாபமாக பலி..!!

 
கஜகஸ்தான் தீ விபத்து
கஜகஸ்தான் நாட்டில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கஜகஸ்தான் கரகாண்டா பகுதியில் உள்ள எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான சுரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தானது இன்று காலை ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அந்த சுரங்கத்தில் வேலை செய்து வந்த 252 பேரில், 208 பேர் வெளியேற்றப்பட்டனர்.

Coal mine fire in Kazakhstan kills 21 workers, investigation underway

ஆனால், தீ விபத்தில் சிக்கி 21 பேர் கருகி உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 23 சுரங்கத் தொழிலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவர்களை  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

Mine fire in Kazakhstan kills 21 people, injures 18 others

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த கசாக் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், நாட்டின் மிகப்பெரிய எஃகு ஆலையை இயக்கும் அந்த சுரங்கத்தின் உடனான முதலீட்டு ஒப்பந்தத்தை நிறுத்துமாறு அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளராம்.

From around the web