சோகம்.. மகனுக்கு சொகுசு கார் பரிசளிப்பு.. நண்பருடன் சேர்ந்து சென்ற 17 வயது சிறுவன் பரிதாப பலி..!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனின் பெற்றோர் அவருக்கு அண்மையில் பரிசாக சொகுசு கார் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த காரை நண்பருடன் ஓட்டிச் சென்றுள்ளார் 17 வயது சிறுவன். மகாராஷ்டிரா மாநிலம் அம்பெர்நாத் அருகே உல்ஷாநகர் அம்பெர்நாத் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 2 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 17 வயது சிறுவனும், அவரது நண்பனும் படுகாயம் அடைந்தனர். காரில் சிக்கிய இருவருமே கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டனர். மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில், இருவருமே மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் பரிசாக வாங்கிக்கொடுத்த கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயது இளைஞர் நண்பருடன்இறந்த சம்பவம மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.