சுதந்திர தினத்தில் சோகம்.. பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், நாட்டின் 80-வது சுதந்திர தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. விழாவின் போது பள்ளியின் பால்கனி முகப்புச் சுவர் எதிர்பாராதவிதமாகத் திடீரென இடிந்து கீழே இருந்த குழந்தைகள் மீது விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கித் படுகாயமடைந்த மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த மேலும் இரண்டு குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் விரைந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளிக் கட்டிடத்தின் தரம் மற்றும் அலட்சியப் போக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
