சோகம்.. பெண் ஓட்டுநர் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!

 
ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 11 பேர் புரோட்டூரில் இருந்து ஆட்டோவில் சென்று உள்ளனர்.இந்நிலையில் ஆட்டோ லாரியை கடக்க முயன்றபோது, ​​எதிரே எர்ரகுண்ட்லாவில் இருந்து வந்த பேருந்து மோதியது. இந்த விபத்தில் பெண் டிரைவர் உட்பட ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முஹம்மது (25), ஷாகிர் (10), ஹசீனா (25), ஆமினா (20) ஆகியோர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். பின்னர் விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

Govt bus and auto collide head-on in Andhra Pradesh; 5 people died

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ஜம்மலமடுகு டிஎஸ்பி நாகராஜூ, எர்ரகுண்ட்லா தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web