கும்பமேளா சென்று திரும்பியதில் சோகம்... கார் விபத்தில் 5 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்தும் கோடிக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் கும்பமேளா நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக நேபாளத்தைச் சேர்ந்த 9 பேர் காரில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்று கும்பமேளாவில் கலந்துக் கொண்டனர். அதன் பின்னர் கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு நேற்று 9 பேரும் காரில் மீண்டும் நேபாளத்திற்கு புறப்பட்டனர்.
பீகாரின் முசாபர்நகர் மாவட்டம் மதுபானி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுக் கொண்டிருந்த போது அதே சாலையில் சிலர் பைக் சாகசம் செய்துக் கொண்டிருந்தனர். பைக்கில் சாகசம் செய்தவர்கள் மீது மோதுவதை தவிர்க்க முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த நேபாளத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!