பழனிக்கு சென்று திரும்பிய போது சோகம்.. கோர விபத்தில் தந்தை - மகள் பலி.. தீவிர சிகிச்சை பிரிவில் மகன்!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே கிடாரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சிவசுப்பிரமணியன் (51). இவரது மகள் ஸ்ரீநிதி (19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி சிவசுப்பிரமணியன் தனது மகள் மற்றும் மகனுடன் பழனி முருகன் கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரவில் கரூர் திரும்பினார்.
அங்கிருந்து மூவரும் இருசக்கர வாகனத்தில் தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர். மோகனூர் உழவர் சந்தை அருகே வந்தபோது, அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது. இதில், தந்தை சிவசுப்பிரமணியன் மற்றும் மகள் ஸ்ரீநிதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மகன் ஸ்ரீகார்த்திகேயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!