சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு திடீரென உடல் நலக் குறைபாடு.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இருப்பினும், அவர் சில காலமாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 14ம் தேதி அவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டு உடல் நலமும் பாதிக்கப்பட்டு கடும் வாந்தியும் ஏற்பட்டது.
Video message from @SadhguruJV on his brain surgery- cracking a joke or two even in these times :) prayers for his speedy recovery 🙏🏼 pic.twitter.com/SrxTa38HOf
— Akshita Nandagopal (@Akshita_N) March 20, 2024
இதனால், அவரது பாதுகாவலர்கள் உடனடியாக அவரை டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையின் ஒரு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவை சரி செய்தனர்.
வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த சத்குரு தற்போது வென்டிலேட்டரில் இருந்து அகற்றப்பட்டு விரைவில் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!