அதிர்ச்சி... பிரசவித்த 25 நாளில் சோகம்... போலி மருத்துவரால் தாய் உயிரிழப்பு!

 
பிரியதர்ஷினி

 திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அருகே கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற கவுஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி . இவர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி உயிரிழந்ததாக  அவரது உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், விசாரித்து பார்த்தால் சிகிச்சை அளித்தவர் போலி மருத்துவர் என்பது  தெரியவந்துள்ளது.  

ஆம்புலன்ஸ்


கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு கவுஞ்சியில் வசித்து வருபவர்  26 வயது விவசாயி சர்வேந்தன்.  இவருடைய மனைவி 24 வயது பிரியதர்ஷினி .இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான பிரியதர்ஷினி, பிரசவத்துக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  25 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  பிரியதர்ஷினி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷி கவுஞ்சியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அப்போது அங்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய சில நிமிடங்களில் பிரியதர்ஷினி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினியின் உறவினர்கள்,  செலுத்திய மருந்து பாட்டிலை எடுத்து கொண்டு மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரியதர்ஷினியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  

உத்தரபிரதேச போலீஸ்


இதனிடையே முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி உயிரிழந்ததாக  அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  கொடைக்கானல் மேல்மலை கிராமமான கவுஞ்சியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் பிரின்ஸ். மருந்தாளுனர் படிப்பு முடித்த  அப்பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் வீடு, வீடாக சென்று மருத்துவம் பார்த்து வந்தாராம். அங்கு சிகிச்சைக்கு வந்த பிரியதர்ஷினிக்கு ஆண்டிபயாடிக் செலுத்தியபோது மயங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவ அதிகாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் . போலீசார் தனிப்படை அமைத்து, தலைமறைவாக உள்ள போலி மருத்துவர்  பிரின்சை தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தை பிறந்த 25 நாட்களில் தாய் உயிரிழந்த சம்பவம் கொடைக்கானல் மன்னவனுர் கவுஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web