திருமணமான சில நாட்களிலேயே சோகம்.. பெண் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
 அபிராமி பாலகிருஷ்ணன்

கேரள மாநிலம் வெள்ளநாடு பகுதியை சேர்ந்தவர் அபிராமி பாலகிருஷ்ணன் (வயது 30). திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார்.இந்நிலையில், அபிராமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் அழைப்பை எடுக்காததால் அபிராமியின் பெற்றோர் பிளாட் உரிமையாளரை தொடர்பு கொண்டனர்.

பின்னர், அபிராமியின் அறைக்கு சென்று பார்த்தபோது, பிணமாக கிடந்தார். இது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அபிராமி உடலில் ஊசி மூலம் சில மருந்துகளை செலுத்தியது தெரியவந்தது.

கொலை

மேலும், இது தற்கொலையாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மை தெரியவரும் என தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு அபிராமி ஒரு டாக்டரை திருமணம் செய்து கொண்டார். விசாரணையில் அவர் வேறு மாநிலத்தில் வேலை செய்து வருவது தெரியவந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web