பத்திரம் மக்களே... டிச.4ல் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா?!

 
இன்று 13 மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷாரா இருங்க!!

தமிழகத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களை உள்ளடக்கிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து டிசம்பர் 5-ஆம் தேதியும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதர மாவட்டங்களான கடலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் உள் மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.