பத்திரம் மக்களே... இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
மழை விடுமுறை

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

மன்னார் வளைகுடா முதல் தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி / காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை பெய்யும் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை விடுமுறை பள்ளிகள் குடை வெள்ளம் மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.