தமிழகத்தில் 19,656 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்குச் சம்பள உயர்வு அறிவிப்பு!

 
கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

கிராம ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு முழு தொகுப்பூதியம் வழங்கிட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தினக்கூலியாகப் பணிபுரியும் 19,656 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

குடிநீர் தொட்டி

அடிப்படைத் தொகுப்பூதியம்: ரூ.5,000, தற்காலிக ஊதிய உயர்வு: ரூ.100, சிறப்புப்படி: ரூ.200. இதர படிகளுடன் சேர்த்து மொத்தம் ரூ.6,700 வரை வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கான நிலுவைத் தொகையானது 30.01.2026 முதல் கணக்கிடப்பட்டுத் தவணை முறையில் வழங்கப்பட உள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் TN-PASS இணையத்தில் பதிவேற்றம் செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.