12-வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ.81,100 வரை சம்பளம் அரசு வேலை... 2,536 காலி பணியிடங்கள் - முழு விபரம்!

 
ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் மத்திய அரசு வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு, மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் லோயர் டிவிஷன் கிளர்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக மொத்தம் 2,536 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

யுஜிசி நெட்  UGC NET தேர்வு

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சமாக ரூ.81,100 வரை வழங்கப்படும்.

தகுதியானவர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 07.10.2026 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு https://ssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.