கள்ளச்சந்தையில் ரயில் இ- டிக்கெட்டுகள் விற்பனை.. டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்து அதிரடி!

வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் போலி சாப்ட்வேர் மூலம் இ-டிக்கெட் பதிவு செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, வேலூர் சைதாப்பேட்டை லதீப் பாஷா தெருவில் இயங்கி வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஐஆர்பிஎப்எஸ் அதிகாரி அபிஷேக் உத்தரா, திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
1 இ-டிக்கெட், 13 காலாவதியான இ-டிக்கெட்டுகள் மற்றும் கணினி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், 45 வயதான டிராவல்ஸ் உரிமையாளரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர் தனது சொந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி போலி நெக்ஸஸ் சாப்ட்வேர் மூலம் இ-டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக முன்பதிவு செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது பயண நிறுவனத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் சீல் வைத்தனர். இதேபோல் திருவண்ணாமலையில் போலி சாப்ட்வேர் மூலம் ரயில்வே இ-டிக்கெட் பதிவு செய்து விற்பனை செய்த 2 டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சீல் வைத்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா