அக்டோபர் 25 முதல் சென்னை-சேலம் 2 விமானங்கள்!
சென்னை-சேலம் இடையே விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வசதி கிடைக்க உள்ளது. வரும் அக்டோபர் 25-ந்தேதி முதல் இந்த வழித்தடத்தில் தினமும் 2 இண்டிகோ விமானங்கள் இயக்கப்பட உள்ளன.இதன்படி, சென்னையில் இருந்து சேலத்திற்கு தினமும் காலை 11 மணிக்கும், பிற்பகல் 3.40 மணிக்கும் இண்டிகோ விமானங்கள் புறப்பட உள்ளன.
அதேபோல், சேலத்தில் இருந்து சென்னைக்கு மதியம் 12.30 மணிக்கும், மாலை 5.10 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு வசதியான நேரத்தை தேர்வு செய்து சென்னை மற்றும் சேலம் இடையே பயணம் மேற்கொள்ள முடியும்.

தற்போது சென்னை-சேலம் இடையே விமான சேவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருந்து வரும் நிலையில், அக்டோபர் 25 முதல் கூடுதல் தினசரி சேவை தொடங்குவது இரு நகரங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தை அதிகரிக்க உள்ளது.சென்னை மற்றும் சேலம் இடையேயான நேரடி விமானப் பயணம் சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் வரை ஆகும். இந்த வழித்தடத்தில் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுகின்றன.

புதிய அட்டவணையின்படி, காலை நேரத்தில் சென்னையில் இருந்து சேலம் செல்ல விரும்புபவர்களுக்கும், பிற்பகலில் பயணிக்க விரும்புபவர்களுக்கும் கூடுதல் தேர்வு கிடைக்கும். மறுமார்க்கத்தில் சேலத்தில் இருந்து மதியம் மற்றும் மாலை நேரங்களில் சென்னை செல்லும் வகையில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.இதனால் தொழில், கல்வி, மருத்துவம் மற்றும் பிற தேவைகளுக்காக சென்னை-சேலம் இடையே அடிக்கடி பயணம் செய்யும் பொதுமக்களுக்கு இந்த கூடுதல் விமான சேவை பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
