ஆவின் நெய் டப்பாக்களைப் பதுக்கிய துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம் - சேலத்தில் பரபரப்பு!
Updated: Aug 28, 2026, 21:44 IST
சேலத்தில் நடந்த ஆய்வின்போது அலுவலகத்தில் நெய் டப்பாக்களை ரகசியமாகப் பதுக்கி வைத்த ஆவின் துணை பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் ஆவின் அலுவலகத்தில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வின் போது, அங்குள்ள 40 லிட்டர் நெய் டப்பாக்கள் திடீரெனக் காணாமல் போனது குறித்துச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஆவின் துணை பொது மேலாளரான சாரதா என்பவரது மேஜை டிராயரில் அந்த நெய் டப்பாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அலுவலகப் பொருட்களை முறைகேடாக மறைத்து வைத்த இந்த விவகாரம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, துணை பொது மேலாளர் சாரதாவை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
