பக்தர்கள் முகத்தில் தீபாராதனை தட்டை காட்டி மிரட்டிய பூசாரி? சேலம் அருகே வைரல் வீடியோ!

 
பூசாரி

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளூற்றுப்பெருமாள் கோயிலில், கூட்ட நெரிசலால் ஆத்திரமடைந்த பூசாரி ஒருவர் பக்தர்களின் முகத்துக்கு அருகே தீபாராதனை தட்டைக் காட்டி மிரட்டும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலில் சுவாமி வீதியுலா நடைபெற்றபோது, பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது எரிச்சலடைந்த பூசாரி, பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் தீபாராதனை தட்டைக் காட்டி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் காணொலி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பூசாரியின் செயலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பொறுமையுடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.